Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஹெச்.எம்., பதவி உயர்வு கவுன்சிலிங்கிற்கு பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வருக்கு மனு

ஹெச்.எம்., பதவி உயர்வு கவுன்சிலிங்கிற்கு பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வருக்கு மனு

ஹெச்.எம்., பதவி உயர்வு கவுன்சிலிங்கிற்கு பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வருக்கு மனு

ஹெச்.எம்., பதவி உயர்வு கவுன்சிலிங்கிற்கு பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வருக்கு மனு

ADDED : ஜூன் 28, 2025 04:26 AM


Google News
நாமக்கல்: 'மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு கவுன்-சிலிங் நடத்திய பின், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்-துறை சார்பில், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்-ளது. இதில், மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்-பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சிலிங் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாற்றுத்திறனாளி ஆசிரி-யர்களுக்கு, 4 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதி-மன்ற தீர்ப்பின் அடிப்படையில், மூத்த மாற்றுத்திறனாளி ஆசிரி-யர்களுக்கு, 4 சதவீத பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலை சேக-ரித்து, அதை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி முன்-னுரிமை பட்டியலில் இணைத்து, அதற்கு பின் மேல்நிலைப்-பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்-படும் என்று தெரிகிறது.அதே நேரத்தில், முதுகலை ஆசிரியர்களுக்கான உள் மாவட்ட, பொது மாறுதல் கவுன்சிலிங், வரும் ஜூலை, 3 அன்றும், வெளி-மாவட்ட கவுன்சிலிங், 4லும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்-டுள்ளது.

இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்திய பின், முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்தினால், பதவி உயர்வில் செல்லக்கூடிய மூத்த முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றிய சில காலி பணியி-டங்கள், தங்களுக்கு கிடைக்கும் என்று காத்திருந்தனர்.

ஆனால், தற்போது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தாமதமாகிறது. இதற்கிடையில், வரும் ஜூலை முதல் வாரமே, முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்-தாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, முதுகலை ஆசிரியர்களி-டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு நடத்தாமல் நடத்த உள்ள இந்த பொது மாறுதல் கவுன்சிலிங்கால், பெரிய அளவில் முதுகலை ஆசிரியர்களுக்கு நன்மை இல்லை. அவற்றை தமிழக அரசு முழு-மையாக அறிந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us