/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க மனுஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க மனு
ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க மனு
ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க மனு
ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க மனு
ADDED : ஜூலை 16, 2024 01:42 AM
நாமக்கல்: 'ராசிபுரம் நீதிமன்றம் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்' என, சசிகலா ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடியுடன் மாட்டு வண்டி, குதிரை வண்டியில் வந்து, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்-தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்-டத்தில், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வதாக தீர்-மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், 'புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு, 7 - 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. பொதுமக்கள் யாராவது குறைந்த விலையிலும், தானமாகவும் வழங்கலாம்' என, தெரிவிக்கப்பட்-டது. ஆனால், அன்றைய தினமே, அணைப்பாளையம் கிரா-மத்தில், 7 ஏக்கர் நிலம், ராசிபுரம் நகராட்சி கமிஷனர் பெயரில் தானமாக வழங்கப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரின் சாலை விரிவாக்கத்திற்காகவும், போக்குவரத்து வசதிக்கா-கவும், தற்போதைய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்வதாக இருந்தால், 2 கி.மீ., துாரத்தில் உள்ள சேலம் - நாமக்கல் புறவழிச்-சாலை அல்லது ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள ராசிபுரம் நீதிமன்றத்-திற்கு எதிரே வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஆக்கி-ரமிக்கப்பட்டுள்ள, 7.30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அங்கு, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, கலெக்டர் உமா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.