/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/குமாரபாளையம் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனுகுமாரபாளையம் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு
குமாரபாளையம் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு
குமாரபாளையம் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு
குமாரபாளையம் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு
ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
நாமக்கல்: குமாரபாளையம் அருகே, மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பாளையம் யூனியன், தட்டாங்குட்டை பஞ்., கொமாரபாளையம், அமானி கிராமம், கே.ஓலப்பாளையம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
நாங்கள் விசைத்தறி, நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இப்பகுதியில் இருந்து, அருகே உள்ள தர்மதோப்பு மயானத்திற்கு செல்ல, அரை கிலோ மிட்டர் துாரத்திற்கு ஒரு பாதை உள்ளது. காலம் காலமாக பயன்படுத்தி வரும் இந்த பாதை, முழுக்க முழுக்க அரசு ஓடை நிலமாகும். அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் சிலர், இந்த ஓடையை ஆக்கிரமித்து பாதையை அழித்து விட்டனர். இதனால், மயானத்திற்கு செல்ல, 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.