/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஜல்லி கற்களான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை ஜல்லி கற்களான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ஜல்லி கற்களான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ஜல்லி கற்களான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ஜல்லி கற்களான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2025 01:13 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், தொப்பப்பட்டியில் இருந்து பச்சுடையாம்பாளையம் செல்ல கிராமத்து சாலை உள்ளது. இந்த சாலையைத்தான் அப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இங்கு தேங்காய் பருப்பு, தொட்டாங்குச்சியை பிரிப்பது உள்ளிட்ட தொழிற்சாலை, தேங்காய் வியாபாரிகள், தனியார், அரசு பள்ளிகள், செங்கல் சூலைகள் ஆகியவை உள்ளன. எனவே, இந்த சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். வாகனங்களும் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு பரபரப்பாக இருக்கும்.
இந்த சாலை தற்போது சேதமடைந்து, ஜல்லி கற்களாக மாறிவிட்டது. இதனால் கார், டூவீலர்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே கிராமத்து சாலையை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.