/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திட்டங்களை செயல்படுத்துவதால் மக்களிடம் எழுச்சி: தி.மு.க.,-எம்.பி திட்டங்களை செயல்படுத்துவதால் மக்களிடம் எழுச்சி: தி.மு.க.,-எம்.பி
திட்டங்களை செயல்படுத்துவதால் மக்களிடம் எழுச்சி: தி.மு.க.,-எம்.பி
திட்டங்களை செயல்படுத்துவதால் மக்களிடம் எழுச்சி: தி.மு.க.,-எம்.பி
திட்டங்களை செயல்படுத்துவதால் மக்களிடம் எழுச்சி: தி.மு.க.,-எம்.பி
ADDED : செப் 15, 2025 02:10 AM
ராசிபுரம்:ராசிபுரம் ஒன்றியம், வடுகம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்-2024--25ன் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''முன்னாள் அமைச்சர் சரோஜா, சபாநாயகர் தனபால் பெரிய பொறுப்பில் இருந்தனர்.
ஆனால், இந்த ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு ஒரு துரும்பு கூட எடுத்துப்போடவில்லை. தி.மு.க., ஆட்சியில் தான் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் நடந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது. தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்ட திட்டங்களால், மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். இதை எதிர்க்கட்சியால் சமாளிக்க முடியவில்லை,'' என்றார்.ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் பாலசந்தர், சார்பு அணி நிர்வாகிகள் பூபதி, சத்யசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.