/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாகனத்தில் அடிபட்டு இறந்த மயில் அடக்கம் வாகனத்தில் அடிபட்டு இறந்த மயில் அடக்கம்
வாகனத்தில் அடிபட்டு இறந்த மயில் அடக்கம்
வாகனத்தில் அடிபட்டு இறந்த மயில் அடக்கம்
வாகனத்தில் அடிபட்டு இறந்த மயில் அடக்கம்
ADDED : மே 22, 2025 02:00 AM
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலை உள்ளது. இங்கு வட்டமலை பஸ் ஸ்டாப் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தேசிய பறவை மயில் இறந்து கிடந்தது. இதை அவ்வழியாக சென்ற திருநங்கை ருத்ரா பார்த்து,
நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், இறந்த மயிலின் உடலை எடுத்து சென்று, கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். பின் மண்ணில் புதைத்தனர்.