/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுாரில் இருந்து கொல்லிமலைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை ப.வேலுாரில் இருந்து கொல்லிமலைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை
ப.வேலுாரில் இருந்து கொல்லிமலைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை
ப.வேலுாரில் இருந்து கொல்லிமலைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை
ப.வேலுாரில் இருந்து கொல்லிமலைக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 01:25 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் இருந்து காலை, மாலையில் கொல்லிமலைக்கு நேரடி அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. பின், கொரோனா காலத்தில் கொல்லிமலைக்கு செல்லும் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களான வெற்றிலை, வாழை போன்ற பொருட்களை கொல்லிமலைக்கு கொண்டு செல்வது முடங்கி உள்ளது.
மேலும், ப.வேலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனுார், வெங்கரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முக்கிய விசேஷ தினங்களான பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் ப.வேலுாரில் இருந்து புறப்படும் அரசு பஸ் மூலம் கொல்லிமலையில் உள்ள பெரியசாமி கோவில், எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர்.
தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, செயற்கை ஏரியான வாசலுார் பட்டியில் உள்ள படகு சவாரி, தோட்டக்கலை தோட்டம், சித்தர் குகைகள், டாம் கோல் மருத்துவ பண்ணை, மூலிகை தோட்டம் மற்றும் இதுர சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களுக்கு சென்று வந்தனர். பிரதோஷ நாளன்று அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக நாமக்கல் சென்று அங்கிருந்து சென்று வருவதால் நேர கால தாமதத்தால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், கொல்லிமலையில் விளைவித்த விவசாய பொருட்கள் மிளகு, தேன், காபி, அரிசி, அன்னாசி, பலாப்பழம், மலை வாழைப்பழம், மூட்டு வலியை போக்கும் கிழங்கு வகைகள் நேரடியாக ப.வேலுார் வந்தடைந்தது.
நேரடி பஸ் ஏற்றம் இல்லாததால் அனைத்தும் முற்றிலுமாக தேக்கமடைந்துள்ளது. இதனால், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மீண்டும் கொல்லிமலைக்கு நேரடி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள்,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.