/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ப.வேலுார் கடைகளில் பிளாஸ்டிக் பை பறிமுதல்ப.வேலுார் கடைகளில் பிளாஸ்டிக் பை பறிமுதல்
ப.வேலுார் கடைகளில் பிளாஸ்டிக் பை பறிமுதல்
ப.வேலுார் கடைகளில் பிளாஸ்டிக் பை பறிமுதல்
ப.வேலுார் கடைகளில் பிளாஸ்டிக் பை பறிமுதல்
ADDED : மே 22, 2025 01:44 AM
ப.வேலுார், ப.வேலுார் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் உத்தரவுப்படி, டவுன் பஞ்சாயத்து துாய்மை மேற்பார்வையாளர்கள் ஜனார்த்தனன், வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, பத்து கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு, தலா, 250 ரூபாய் வீதம், பத்து கடைகளுக்கு, 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.