/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பிப்., 2ல் பெருந்திரள் முறையீடு பஞ்., பணிகள் பாதிக்கும் அபாயம்பிப்., 2ல் பெருந்திரள் முறையீடு பஞ்., பணிகள் பாதிக்கும் அபாயம்
பிப்., 2ல் பெருந்திரள் முறையீடு பஞ்., பணிகள் பாதிக்கும் அபாயம்
பிப்., 2ல் பெருந்திரள் முறையீடு பஞ்., பணிகள் பாதிக்கும் அபாயம்
பிப்., 2ல் பெருந்திரள் முறையீடு பஞ்., பணிகள் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜன 25, 2024 10:12 AM
நாமக்கல்: 'கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்., 2ல், பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடக்கிறது. அதனால், பஞ்., பணிகள் அனைத்தும் பாதிக்கும் அபாயம் உள்ளது' என, தமிழக ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக கிராம ஊராட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு (கோப்ஸ்) சார்பில், வரும் பிப்., 2ல், சென்னை சைதாப்பேட்டை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில், 'பெருந்திரள் முறையீட்டு இயக்கம்' நடக்கிறது. இதில், கிராம பஞ்.,களில், -40 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் நிர்ணயித்து, காலமுறை ஊதியத்தில் வழங்க வேண்டும்.
பஞ்., செயலர்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். அவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நடத்தப்படும் இந்த பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தில், மாநிலம் முழுவதும், 12,525 கிராம பஞ்.,களில் பணியாற்றும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், பஞ்., செயலர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும், கிராம பஞ்., தொடர்பான அனைத்து பணிகளும் முடங்கும். அதனால், தமிழக அரசு கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி உரிய அரசாணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.