/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாழை மண்டிகளில் அதிகாரிகள் ஆய்வு குட்கா விற்ற 4 கடைகளுக்கு அபராதம் வாழை மண்டிகளில் அதிகாரிகள் ஆய்வு குட்கா விற்ற 4 கடைகளுக்கு அபராதம்
வாழை மண்டிகளில் அதிகாரிகள் ஆய்வு குட்கா விற்ற 4 கடைகளுக்கு அபராதம்
வாழை மண்டிகளில் அதிகாரிகள் ஆய்வு குட்கா விற்ற 4 கடைகளுக்கு அபராதம்
வாழை மண்டிகளில் அதிகாரிகள் ஆய்வு குட்கா விற்ற 4 கடைகளுக்கு அபராதம்
ADDED : செப் 13, 2025 01:55 AM
ப.வேலுார், ப.வேலுார் பகுதி வாழை மண்டிகளில், ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், குட்கா விற்ற கடைகளுக்கு, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, 'சீல்' வைக்கப்பட்டது.
ப.வேலுார், மோகனுார் சுற்று வட்டார பகுதிகளில் வாழைத்தார் மீது, 'எத்திலின்' ரசாயனம் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, கடந்த, 7ல் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, தன் குழுவினருடன், ப.வேலுார், மோகனுார் பகுதிகளில் உள்ள வாழை மண்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 15 வாழைத்தார்கள் வேதிப்பொருட்கள் தெளித்து பழுக்க வைத்தது கண்டறியப்பட்டது. மேலும், செயற்கையாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும், வேதிப்பொருட்கள் ஒரு லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 15 வாழைத்தார்களையும் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. அப்போது, வாழைத்தார் வியாபாரிகளிடம், 'ரசாயனம் தெளித்தோ, கார்பைடு கல் மூலம் வாழைத்தார்களை பழுக்க வைக்கவோ கூடாது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி, வாழைத்தார்களை இயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும். ஆய்வில் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட டீக்கடை, மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நான்கு கடைகளில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 21.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.