Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/புதிய வேளாண் வணிக வளாக கட்டடம்; வனத்துறை அமைச்சர் திறந்து வைப்பு

புதிய வேளாண் வணிக வளாக கட்டடம்; வனத்துறை அமைச்சர் திறந்து வைப்பு

புதிய வேளாண் வணிக வளாக கட்டடம்; வனத்துறை அமைச்சர் திறந்து வைப்பு

புதிய வேளாண் வணிக வளாக கட்டடம்; வனத்துறை அமைச்சர் திறந்து வைப்பு

ADDED : ஜூலை 16, 2024 01:42 AM


Google News
மோகனுார்: மோகனுார், வளையப்பட்டியில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில், 41.30 லட்சம் ரூபாயில், புதிய வேளாண் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா, நேற்று நடந்-தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசி-யதாவது:முதல்வர் உத்தரவுப்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில், பயிர் கடன், 5 கோடி ரூபாய்; நகைக்கடன், 1.30 கோடி ரூபாய்; மகளிர் சுய உதவிக்குழு கடன், 62 லட்சம் ரூபாய் என, மொத்தம், 6.83 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்-தாண்டு, 13.52 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான நேற்று, நாமக்கல் மாவட்டத்தில், 41 அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில், 84 பேருக்கு, 70.62 லட்சம் ரூபாய் மதிப்பில், கடனுதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர் நவலடி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, துணைப்பதி-வாளர் ஜேசுதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us