Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

ADDED : ஜூன் 30, 2024 03:28 AM


Google News
பொது பாதை ஆக்கிரமிப்பு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கார்கூடல்பட்டி, மெட்டாலா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கலெக்டர் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கேட்டுகாரர் தோட்டம் செல்ல பொதுப்பாதை உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், இவ்வழியாக செல்லும் வாகனங்களையும் நிறுத்தி பிரச்னை செய்கின்றனர். நீதிமன்றம் பொதுப்பாதை எனக்கூறி வாகனம் போக வர உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒரு சிலர் தொடர்ந்து பொதுப்பாதையில் வாகனம் செல்வதை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து தாசில்தார், போலீசாரிடம் புகார் செய்துள்ளோம். எனவே, பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்., முப்பெரும் விழாநாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார காங்., சார்பில் மெட்டாலா பஸ் ஸ்டாப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் இந்திரா சிலை அமைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை வைக்கப்பட்ட நிலையில், பணி முழுமை அடையவில்லை. இதனால் சிலையை மூடி வைத்திருந்தனர். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை வட்டார காங்., மீண்டும் இப்பணியை தொடங்கி முடித்தனர். சிலை திறப்பு விழா, இன்று நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை, பாரத ஒற்றுமை நீதி பயண கொடியேற்று விழா, இந்திரா சிலை திறப்பு விழா, முன்னாள் சேர்மன் புள்ளியப்பன் நினைவு பட திறப்பு விழா என, முப்பெரும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. மேற்கு ஒன்றிய வட்டார தலைவர் இளங்கோவன் தலைமை வகிக்கிறார். எம்.பி., ராஜேஸ்குமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

ஆடு திருடிய 2 பேர் கைதுஎலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அப்பாவு மனைவி பழனியம்மாள், 65. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், மூதாட்டி பழனியம்மாளிடம், ஆட்டின் விலையை கேட்பது போல் பேச்சுக்கொடுத்தனர். திடீரென ஒரு ஆட்டை துாக்கி அவர்கள் வந்த டூவீலரில் வைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். மூதாட்டி சத்தம் போட்டதால், அருகிலிருந்த மக்கள் ஓடி வந்து ஆடு திருடர்களை சுற்றி வளைத்து, எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், சேலம், ஜான்சன்பேட்டையை சேர்ந்த நண்பர்கள் வெங்கடேஷ், 30, விஷ்ணு பிரசாத், 23, என்பது தெரியவந்தது. டூவீலரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

மாணவியருக்கு டி.சி.,வழங்கிய ஹெச்.எம்.,

ராசிபுரம்: ராசிபுரம், சிவானந்தா சாலையில், 10ம் வகுப்பு படித்த மாணவியர், இரண்டு பேர் முறையே, 457 மற்றும் 485 மதிப்பெண் பெற்றனர். இவர்கள் அதே பள்ளியில், 11ம் வகுப்பு கணித பிரிவில் தமிழ் வழியில் சேர்ந்தனர். இந்நிலையில், தமிழ், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களை ஒன்றாக அமர வைத்து, ஒரே சமயத்தில் பாடம் நடத்தியுள்ளனர். இதனால், தமிழ் வழியில் சேர்ந்த மாணவியர் இருவருக்கும், பாடம் சரியாக புரியவில்லை. இதனால் அருகில் உள்ள அண்ணா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவியர் சேர விருப்பப்பட்டனர். ஆனால், சிவானந்தா சாலை தலைமை ஆசிரியர் வருதராஜ், டி.சி., வழங்காமல் தாமதப்படுத்தினார். இதனால், மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, நேற்று இரண்டு மாணவியரின் பெற்றோரை அழைத்த தலைமை ஆசிரியர் வருதராஜ், இருவரது டி.சி.,யையும் வழங்கினார். இதனால், ஒரு வாரமாக நடந்து வந்த மாணவியர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us