ADDED : ஜூன் 09, 2024 03:53 AM
ரூ.1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி மஞ்சள் குவிண்டால், 16,355 ரூபாய் முதல், 18,929 ரூபாய், கிழங்கு மஞ்சள், 15,206 ரூபாய் முதல், 17,169 ரூபாய், பனங்காளி மஞ்சள், 19,805 ரூபாய் முதல், 24,569 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 1,310 மூட்டை மஞ்சள், 1.25
கோடிக்கு விற்பனையானது.கலிக்கம் சித்த வைத்திய முகாம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கலிக்கம் சித்த வைத்திய முகாம், நேற்று நடந்தது. சங்க தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். சித்தா டாக்டர் கார்த்தி கலந்துகொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாறை புளிந்து கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சைக்கு, கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல், தலைவலி, வயிறு, கர்ப்பப்பை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.