Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முழங்கால் சுழற்சியில் ஒரு நிமிடத்திற்கு 118 முறை சிலம்பம் சுற்றி நாமக்கல் சிறுவன் கின்னஸ் சாதனை

முழங்கால் சுழற்சியில் ஒரு நிமிடத்திற்கு 118 முறை சிலம்பம் சுற்றி நாமக்கல் சிறுவன் கின்னஸ் சாதனை

முழங்கால் சுழற்சியில் ஒரு நிமிடத்திற்கு 118 முறை சிலம்பம் சுற்றி நாமக்கல் சிறுவன் கின்னஸ் சாதனை

முழங்கால் சுழற்சியில் ஒரு நிமிடத்திற்கு 118 முறை சிலம்பம் சுற்றி நாமக்கல் சிறுவன் கின்னஸ் சாதனை

ADDED : செப் 07, 2025 02:18 AM


Google News
நாமக்கல், முழங்கால் சுழற்சி முறையில், ஒரு நிமிடத்திற்கு, 118 முறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்த நாமக்கல் சிறுவன், கின்னஸ்

புத்தகத்தில் இடம்பிடித்தார்.

நாமக்கல் காமராஜர் நகரை சேர்ந்த ராஜ்குமார், திவ்யா தம்பதியரின் மகன் தேவசிவபாலன், 11. இவர், 6 வயது முதல், நாமக்கல் ஏகலைவா கலைக்கூடத்தில், சிலம்பம் கற்று வருகிறார். மாணவர் தேவசிவபாலன், நம் பாரம்பரிய கலையான சிலம்ப கலையில் ஆர்வத்துடன் இருந்துள்ளார். இதையறிந்த பெற்றோர், சிலம்பத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பயிற்சிக்கு அனுப்பினர். தொடர்ந்து, அலங்கார சிலம்ப பாடத்தில், முழங்கால் சுற்று பயிற்சியை மேற்கொண்டார்.

'ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனர் டிராகன் ஜெட்லி முன்னிலையில், கடந்த, ஜன., 25ல், நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், சிலம்பு கம்பை தன் இரு முழங்கால்களுக்கு இடையே, ஒரு நிமிடத்திற்கு, 118 முறை சுழற்றி சாதனை படைத்தார். இவரது இந்த சாதனையை, லண்டன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கின்னஸ் நிறுவனத்தால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, மாணவருக்கு கடந்த, 28ல், லண்டனில் இருந்து சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. அவரை, பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us