/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆர்ப்பாட்டம் பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 31, 2024 07:16 AM
நாமக்கல்: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தமிழ்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நியமனம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும், ஆக., 21ல், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் பணியாளர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என, தெரிவித்தனர். இணை செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட பொருளாளர் பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.