ADDED : ஜூன் 13, 2025 01:53 AM
ராசிபுரம், ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் பகுதியில் ஊராட்சி சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.
ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட களரம்பட்டி சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலையை போடிநாயக்கன்பட்டி, தம்மநாயக்கன்படி, பாச்சல், குதிரைசின்னம்பட்டி கிராமங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது. லேசாக மழை பெய்தாலே, ஆங்காங்கே, 2 அடி உயரத்திற்கு குட்டை போல் மழைநீர் தேங்கி விடுகிறது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. சாலையை உடனடியாக சீரமைத்து, கிராம மக்கள் பாதுகாப்பாக செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.