/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பெட்ரோல் பங்கில் மொபைல் திருட்டு: போலீசார் விசாரணைபெட்ரோல் பங்கில் மொபைல் திருட்டு: போலீசார் விசாரணை
பெட்ரோல் பங்கில் மொபைல் திருட்டு: போலீசார் விசாரணை
பெட்ரோல் பங்கில் மொபைல் திருட்டு: போலீசார் விசாரணை
பெட்ரோல் பங்கில் மொபைல் திருட்டு: போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 18, 2024 12:17 PM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, மாதேஸ்வரன் கோவில் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு, பெட்ரோல் பங்கில் வேலை செய்த பணியாளர் ஒருவர், மேஜை மீது மொபைல் போனை வைத்துவிட்டு, அயர்ந்து துாங்கி விட்டார். அப்போது, 65 வயது முதியவர் ஒருவர், டூவீலருக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார்.
பணியாளர் துாங்கிக்கொண்டிருந்ததால், 50,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை எடுத்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் கிளம்பி சென்றார். பணியாளர் எழுந்து பார்த்த போது, மொபைல் போனை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, முதியவர் மொபைல் போனை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.