/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் செயலி, இணையதளம் துவக்கம்: கலெக்டர் மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் செயலி, இணையதளம் துவக்கம்: கலெக்டர்
மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் செயலி, இணையதளம் துவக்கம்: கலெக்டர்
மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் செயலி, இணையதளம் துவக்கம்: கலெக்டர்
மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் செயலி, இணையதளம் துவக்கம்: கலெக்டர்
ADDED : ஜூன் 25, 2025 01:25 AM
நாமக்கல், 'மூத்த குடிமக்கள் நலனுக்காக தமிழக அரசு சார்பில், தனியாக மொபைல் செயலி மற்றும் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், மூத்த குடிமக்கள் நலன் கருதி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு, 'மொபைல் செயலி' மற்றும் தனியான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம், இந்த செயலியை தங்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி, மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக, அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், அதிகாரிகள் விபரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விபரங்கள், மருத்துவமனை விபரங்கள் மற்றும் அவர்களின் குறைகளை தெரிவிக்கவும், மூத்த குடிமக்கள் மொபைல் செயலி வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரும், தங்களது மொபைல் போனில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். மேலும், மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.