/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாயமான பி.டி.ஓ., வீடு திரும்பினார் கடத்திய 4 பேர் கும்பலிடம் விசாரணை மாயமான பி.டி.ஓ., வீடு திரும்பினார் கடத்திய 4 பேர் கும்பலிடம் விசாரணை
மாயமான பி.டி.ஓ., வீடு திரும்பினார் கடத்திய 4 பேர் கும்பலிடம் விசாரணை
மாயமான பி.டி.ஓ., வீடு திரும்பினார் கடத்திய 4 பேர் கும்பலிடம் விசாரணை
மாயமான பி.டி.ஓ., வீடு திரும்பினார் கடத்திய 4 பேர் கும்பலிடம் விசாரணை
ADDED : செப் 07, 2025 12:46 AM
பள்ளிப்பாளையம், மாயமான பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., நேற்று மதியம் வீடு திரும்பினர். அவர் அளித்த தகவல்படி, கடத்திய பஞ்., செயலாளர் உள்பட, நான்கு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ.,வாக பணிபுரிபவர், நாமக்கல்லை சேர்ந்த பிரபாகரன், 54; இவர் கடந்த, 4ல், பணிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது மனைவி யசோதா அளித்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார், மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பிரபாகரன் கார் வேலகவுண்டம்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பிரபாகரனை, ஒரு கும்பல் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதை அறிந்த கும்பல், பிரபாகரனை திருச்சியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றது.
பின், பஸ் பிடித்து பிரபாகரன், நேற்று மதியம் வீடு வந்து சேர்ந்துள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பஞ்., செயலாளர் உள்பட, நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து, பஞ்., செயலாளர் உள்பட, நான்கு பேரை போலீசார், நேற்று இரவு பிடித்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.