/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பால் பாக்கெட் திருட்டு; 'சிசிடிவி' கேமராவில் பதிவுபால் பாக்கெட் திருட்டு; 'சிசிடிவி' கேமராவில் பதிவு
பால் பாக்கெட் திருட்டு; 'சிசிடிவி' கேமராவில் பதிவு
பால் பாக்கெட் திருட்டு; 'சிசிடிவி' கேமராவில் பதிவு
பால் பாக்கெட் திருட்டு; 'சிசிடிவி' கேமராவில் பதிவு
ADDED : ஜூலை 10, 2024 07:22 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பெருமாபாளையம் புதுார் பகுதியில், ஆவின் பால் வியாபாரம் செய்து வருபவர் சபாபதி, 61.
இவர் வியாபாரம் செய்யும் இடத்தில், அதிகாலை, 3:00 மணியளவில், வேனில் பால் டப்பாக்களை கொண்டு வந்து இறக்கி வைத்துவிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு இறக்கி வைக்கப்படும் பால் டப்பாக்களில் இருந்து, பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போய் வந்தன. இதையடுத்து, பால் திருடு போவதை கண்காணிக்க, 'சிசிடிவி' கேமரா பொருத்தினார். இதில், இரண்டு இளைஞர்கள் வெள்ளை நிற சாக்கு பையுடன் வந்து, பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்து. இதுகுறித்த, 'சிசிடிவி' காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.