/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம்
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம்
ADDED : மே 22, 2025 01:46 AM
நாமக்கல் நாமக்கல் அடுத்த பொம்மக்குட்டைமேடு, தாளம்பாடியில் பிரசித்திபெற்ற முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி, கடந்த, 13ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம், கரகம் பாலிப்பு, வடிசோறு, மாவிளக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று காலை, பொம்மக்குட்டைமேட்டில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. 23ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.