/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நீர்வழி பாதையை மறைத்து வரைபடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனுநீர்வழி பாதையை மறைத்து வரைபடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
நீர்வழி பாதையை மறைத்து வரைபடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
நீர்வழி பாதையை மறைத்து வரைபடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
நீர்வழி பாதையை மறைத்து வரைபடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு
ADDED : ஜூன் 02, 2024 06:38 AM
நாமக்கல் : 'நீர்வழி பாதையை மறைத்து, அரசுக்கு வரைபடம் அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணனிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மோகனுார், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய சுற்றுப்புற பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதற்காக வருவாய்த்துறையினர் நிலம் எடுப்பதற்கான ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 2023 மே, 5ல், நாமக்கல் ஆர்.டி.ஓ., பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் அழைத்து, வருவாய்த்துறையினரால் தயார் செய்யப்பட்ட வரை படத்தையும், அப்பகுதி நிலத்தின் உண்மைத்தன்மையை விவசாயிகளிடம் காண்பித்தனர். அப்போது, அங்குள்ள நிலத்தின் உண்மைத்தன்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம், அதிகாரிகள் தயாரித்த வரைபடத்தில் அப்பகுதியில் உள்ள, நீர் நிலைகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும், முப்போகமும் விளையக்கூடிய விவசாய நிலங்களை தரிசு என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் இப்பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், வன விலங்குகளுக்கான பகுதிகளும் மறைக்கப்பட்டு, அருகாமையில் இருக்கும் வீடுகள், ஏரி, குளம், குட்டைகள், நீரோடைகள், கரைப்போட்டான் ஆறு ஆகியவை மறைக்கப்பட்டிருப்பதையும் விவசாயிகள் சுட்டி காண்பித்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், இப்பகுதியில் உண்மைத்தன்மையை மறைத்து அரசுக்கு அறிக்கை அனுப்பிய சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூ., கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.