Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குடும்பத்தினர் கவனிக்காததால் ஆற்றில் குதித்தவர் உயிருடன் மீட்பு

குடும்பத்தினர் கவனிக்காததால் ஆற்றில் குதித்தவர் உயிருடன் மீட்பு

குடும்பத்தினர் கவனிக்காததால் ஆற்றில் குதித்தவர் உயிருடன் மீட்பு

குடும்பத்தினர் கவனிக்காததால் ஆற்றில் குதித்தவர் உயிருடன் மீட்பு

ADDED : ஜூன் 07, 2025 01:44 AM


Google News
பள்ளிப்பாளையம், கடலுார், புவனகிரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 50; இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக, திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, கை, கால் லேசாக செயலிழந்து உள்ளது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். குடும்பத்தினர் யாரும் கவனிக்காததால், மனமுடைந்த நிலையில் சீனிவாசன் காணப்பட்டார். நேற்று, திருப்பூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்துள்ளார்.

ஈரோட்டில் இருந்து நடையாக, 11:00 மணிக்கு பள்ளிப்பாளையம் பகுதிக்கு வந்தார். பின், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் மேலே இருந்து ஆற்றில் குதித்துவிட்டார். இதை பார்த்த டெம்போ டிரைவர், வாகனத்தில் இருந்த கயிரை எடுத்து ஆற்றில் வீசினார். கயிற்றை பிடித்த சீனிவாசன் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தார்.மேலும், ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் படர்ந்திருந்ததால், சீனிவாசன் அதில் சிக்கிக்கொண்டார். தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு வீரர்கள், பரிசலில் சென்று ஒருமணி நேர போராட்டத்திற்கு பின், சீனிவாசனை

உயிருடன் மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us