/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மாநில கபடி பேட்டி மதுரை அணி முதலிடம் மாநில கபடி பேட்டி மதுரை அணி முதலிடம்
மாநில கபடி பேட்டி மதுரை அணி முதலிடம்
மாநில கபடி பேட்டி மதுரை அணி முதலிடம்
மாநில கபடி பேட்டி மதுரை அணி முதலிடம்
ADDED : மே 11, 2025 01:12 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, அரியாகவுண்டம்பட்டியில் இளையவர் சடுகுடு கிளப் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி, இரு தினங்களுக்கு முன் தொடங்கியது.
போட்டியை, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழகத்தின், 'ஏ' கிரேடு அணிகளான சென்னை வருமான வரித்துறை, மதுரை கஸ்டம்ஸ், சேலம், தம்மம்பட்டி, வாழப்பாடி, நாமக்கல், குமாரபாளையம், திருச்செங்கோடு, வெங்கரை, மோகனுார், இடையாறு, ஈரோடு, கரூர், மதுரை, துாத்துக்குடி என, 19 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில், மதுரை கஸ்டம்ஸ் அணி, சென்னை வருமான வரித்துறை அணியை தோற்கடித்து முதல்பரிசை பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு, 65,000 ரூபாய் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. 2ம் பரிசாக, 45,000 ரூபாய், கேடயம் வழங்கப்பட்டது. 3, 4ம் இடம் பிடித்த குமாரபாளையம் கண்ணப்பர், சேலம், 7 லயன்ஸ் அணிகளுக்கு, தலா, 25,000 ரூபாய், சுழற் கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, அரியாகவுண்டம்பட்டி இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை தலைவர் மணி, செயலாளர் அருள், பொருளாளர் நடேசன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.