/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்
எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்
எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்
எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்

சென்னை:சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கு, வளைகுடா நாடுகளில் இருந்த கப்பல்கள் வாயிலாக, சமையல் எரிவாயு கொண்டு வரப்படுகிறது.
இது, அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனைத்திற்கு,- ஐ.ஓ.சி.எல்., குழாய்கள் வாயிலாக கொண்டு வரப்படுகிறது.
பின் அங்கிருந்து, எல்.பி.ஜி., டேங்கர் லாரிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள வீட்டு உபயோக, 'சிலிண்டர் பில்லிங்' மையங்களான, 'பாட்டிலிங் பாயின்ட்'களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒவ்வொரு லாரியிலும், 18,000 கிலோ எடையுடன் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 250 - 300 லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு எரிவாயு அனுப்பபடுகிறது. இந்த லாரிகள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகின்றன.
இந்நிலையில், எல்.பி.ஜி., டேங்கர் லாரிகளுக்கு, தற்போது நடைமுறையில் இருந்த ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த, ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதில், பயன்பாட்டில் உள்ள லாரிகளை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 21,000 கிலோ எடை கொண்ட மூன்று அச்சுக்களை கொண்ட லாரிகளாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு, லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பழைய லாரிகளை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே இருந்த நடைமுறையை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக நடந்த பேச்சில் முடிவு ஏற்படாத நிலையில், நேற்று காலை முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் எரிவாயு கொண்டு செல்லும் பணிகள் முடங்கி உள்ளன.
இதே நிலை தொடர்ந்தால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தென்மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:
கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளோம். இதனால், 4,000 காஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
போராட்டம் காரணமாக மங்களூரு, பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட, 11 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்தும் காஸ் ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அழைத்துள்ளனர். உடன்பாடு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கி கொள்வோம். இல்லை எனில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு கூறினார்.