/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார் விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்
விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்
விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்
விசாரணைக்கு ஆஜராகாத லாரி டிரைவர் சிக்கினார்
ADDED : ஜூன் 02, 2025 06:49 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுார், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 44. லாரி டிரைவர். இவர் மீது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை தாக்கியது தொடர்பாக, 2024ல், பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர். பின், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஏப்., 17ல், பிடிவாரன்ட் பிறப்பித்தது. நேற்று, வீட்டில் இருந்த பாலமுருகனை, போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.