தாமதமாக விண்ணப்பம் நாளை கலந்தாய்வு
தாமதமாக விண்ணப்பம் நாளை கலந்தாய்வு
தாமதமாக விண்ணப்பம் நாளை கலந்தாய்வு
ADDED : ஜூன் 15, 2025 01:58 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட் அரசு கல்லுாரியில், 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, சிறப்பு ஒதுக்கீட்டுடன், கடந்த, 2ல் தொடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், முதல் மூன்று நாட்கள் கலந்தாய்வு நடந்தது.
இதில், மொத்தம், 20 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று மாலை வரை நடந்தது. இதுகுறித்து தகவலை, விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல், வாட்ஸாப், மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தாமதமாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும் என கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.