/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை
கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை
கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை
கோட்டை பஜனை மடத்தில் கேதார கவுரி விரத பூஜை
ADDED : அக் 22, 2025 01:17 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட நாயுடு சங்கம் சார்பில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி ஆண்டுதோறும் கேதார கவுரி விரத பூஜை நடந்தது. 27ம் ஆண்டான, நேற்று கவுரி விரத பூஜை நடந்தது. தொடர்ந்து, 21 நாட்கள் விரதம் மேற்கொண்ட பெண்கள், ஐப்பசி அமாவாசையான நேற்று நிறைவடைந்தது.
அதையொட்டி, நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள கோட்டை பஜனை மடத்தில் அலங்கரிக்கப்பட்ட அர்த்தனாரி சுவாமி, பார்வதி தேவி முன், நேற்று காலை, 7:30 மணிக்கு கேதார கவுரி பூஜை துவங்கி, மாலை, 3:00 மணி வரை வாழை இலையில் மஞ்சள் விநாயகர், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, அதிரசம், அரளி பூ, வாழைப்பழம் ஆகியவை வைத்து கேதார கவுரி படையலிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கம் நோன்பு கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


