/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கரூர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: மாஜி அமைச்சர்கரூர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: மாஜி அமைச்சர்
கரூர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: மாஜி அமைச்சர்
கரூர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: மாஜி அமைச்சர்
கரூர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: மாஜி அமைச்சர்
ADDED : ஜூன் 02, 2024 07:23 AM
கரூர், :''கரூர் எம்.பி., தொகுதியில், இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெறும்'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அ.தி.மு.க., சார்பில், கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை முகவர்கள், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,- அ.தி.மு.க.,வை தொடங்கி சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் லோக்சபா தேர்தல் தான். அதில், மகத்தான வெற்றி பெற்றோம். தற்போது, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், லோக்சபா தேர்தலை சந்தித்துள்ளோம். இதில், பெறும் வெற்றி என்பது வரும், 2026 ல் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு முன்னோட் டமாக அமையும். கரூர் தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்காக, 1,000 முகவர்களை நியமித்துள்ளோம். அதில், 14 டேபிள்களில் முகவர்கள் மிக முக்கியமானவர்கள். கரூர் தொகுதியில், நோட்டோவை சேர்த்து, 55 வேட்பாளர்கள் என கணக்கில் கொள்ள வேண்டும்.
இதனால், ஓட்டு எண்ணிக்கை தாமதம் ஆகலாம். எனவே, அ.தி.மு.க., முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெறும் வரை, இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது, முகவர்கள் வெளியே செல்ல கூடாது. கரூர் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் சிவசாமி, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, நிர்வாகிகள் நெடுஞ்செழியன், கமலகண்ணன், சுப்பிரமணியம், ஆலம் தங்கராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.