ADDED : ஜூன் 26, 2025 01:34 AM
ப.வேலுார்,
ப.வேலுார், அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை சார்பில், கலிக்கம் கண் சிகிச்சை முகாம், செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, திண்டுக்கல்லை சேர்ந்த சித்தா டாக்டர் அசோகன் கூறுகையில், ''உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்குவதே கலிக்கம் சிகிச்சையாகும். மருந்து விடும் நாளில் அசைவம் சாப்பிடக்கூடாது. ஐ.ஓ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம்,'' என்றார்.
மாதந்தோறும், 1, 16ம் தேதியில், ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்திலும், ஒவ்வொரு மாதம், 25ல் ப.வேலுார் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்திலும், கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.