/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் திருட்டு 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் திருட்டு
5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் திருட்டு
5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் திருட்டு
5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் திருட்டு
ADDED : செப் 12, 2025 02:23 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அடுத்துள்ள இடையார்பாளையம் கிராமத்தில், 5 வீடுகளில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி, பித்தளை, இரு சக்கர வாகனம், மின்மோட்டார் திருட்டு நடந்துள்ளது.
திருச்செங்கோடு, ராசிபுரம் சாலையில் மாதா கோவில் அருகே உள்ள இடையார்பாளையம் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் ஐந்து வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல், 36, ஊர் கோவில் வீட்டில் குடியிருக்கும் மெக்கானிக் விஜயகுமார், 38, தனியார் கல்லுாரியில் பணிபுரியும் கோபால், 35 மற்றும் சிவகாமி 48, தாணப்பன், 45, ஆகியோரின் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி கொலுசு, பித்தளை பாத்திரங்கள், மின்மோட்டார், டி.வி.எஸ்., எக்ஸெல் மொபட் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது. திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.