/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம் உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்
உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்
உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்
உயரத்தில் நிழற்கூடம் பயணியர் நிற்க சிரமம்
ADDED : ஜூன் 05, 2025 01:27 AM
ராசிபுரம், ராசிபுரம்-மோகனுார் தொழிற்வடச்சாலை அமைக்கும்போது சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதனால், மேடான பகுதிகளில் பல இடங்களில் சாலையை தாழ்வாக அமைத்துள்ளனர். பேளுக்குறிச்சி அடுத்த கணவாய்மேட்டில், 10 அடி உயரத்திற்கு தாழ்வாக சாலை அமைத்துள்ளனர்.
இதனால், கணவாய்மேடு பஸ் ஸ்டாப் பழைய நிழற்கூடம் மிக உயரமான இடத்திற்கு சென்றுவிட்டது. ராசிபுரத்திற்கு செல்லும் பயணிகளுக்கு புதிய நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாமக்கல் செல்லும் பயணிகள் காத்திருக்க நிழற்கூடம் இல்லை. உயரமான இடத்தில் உள்ளதால், முதியவர்கள், பெண்கள் காத்திருக்க முடிவதில்லை.
இதனால், வெயில், மழையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, நாமக்கல் செல்லும் பயணிகளுக்கும் பயன்படும் வகையில் கணவாய்மேடு பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.