/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல் மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்
மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்
மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்
மயானத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 01:15 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த பச்சுடையாம்பாளையத்தில், மயானத்திற்கு தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பாளையம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் ஒரு சில பிரிவினருக்கு, பேளுக்குறிச்சி சாலையில் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் சடலத்தை எரிக்கும்போது, மண்ணை குழப்பி விறகு மேல் பூசி மூடிவிடுவர். மேலும் இறுதி சடங்கு செய்ய வசதியாக இப்பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துள்ளனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தண்ணீர் வினியோகம் செய்யும் ஆழ்துளை கிணறு வறண்டுவிட்டது. இதனால், தண்ணீர் எடுத்து செல்ல முடியவில்லை. தகன மேடைக்கு வருபவர்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே மீண்டும் சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் எடுத்து விட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.