Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்கம் அதிகரிப்பு: கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்கம் அதிகரிப்பு: கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்கம் அதிகரிப்பு: கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்கம் அதிகரிப்பு: கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

ADDED : ஜூன் 20, 2024 06:42 AM


Google News
ராசிபுரம் : ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் பயிரிட்டுள்ள நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்குதல் அதிகம் உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் முறை குறித்து, ராசிபுரம் வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியிருப்பதாவது:நெற்பயிரில் கூண்டுப்புழு தாக்குதல் தொடங்கியதும், இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். இதனால், இலைகள் வெள்ளைநிற காகிதம் போல் தோற்றமளிக்கும். இலையின் நுனிப்பகுதியை அறுத்தால் துார்களை சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும். குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும். கத்தரிக்கோல் கொண்டு வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும். இதை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு, 6 லிட்டர் என்ற அளவில் மண்ணெண்ணெய் தெளிப்பது மூலம் கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.இளம் பயிர்களின் குறுக்கே கயிரைப்போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலில் உள்ள நீரை வடியச்செய்யலாம். வயலின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு நாற்றின் மீது படும்படி கயிரை கொண்டு இழுத்தால் முட்டைகளும் கீழே விழுந்துவிடும். மிதைல் பாரத்தியான், 0.05 சதவீதம் அல்லது குயினனைல்பாஸ், 0.05 சதவீதம் தெளிப்பதன் மூலமும் கூண்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us