/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரெட்டிங் விலை அதிகரிப்பு: ஆதரவு தர சங்கத்தினர் கோரிக்கைரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரெட்டிங் விலை அதிகரிப்பு: ஆதரவு தர சங்கத்தினர் கோரிக்கை
ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரெட்டிங் விலை அதிகரிப்பு: ஆதரவு தர சங்கத்தினர் கோரிக்கை
ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரெட்டிங் விலை அதிகரிப்பு: ஆதரவு தர சங்கத்தினர் கோரிக்கை
ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரெட்டிங் விலை அதிகரிப்பு: ஆதரவு தர சங்கத்தினர் கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2024 01:27 AM
நாமக்கல்: 'ரப்பர் விலை ஏற்றம், சீனா டயர் வரவு எதிரொலியால், டயர் ரீட்-ரெட்டிங் விலை, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் ஆதரவு அளிக்-கும்படி', தமிழ்நாடு டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜ்குமார், நாமக்கல் தாலுகா சங்க தலைவர் வரதராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கனரக வாகன மோட்டார் துறையில், மத்திய அரசால் அதிக எடை ஏற்ற அனுமதி வழங்கியதால், டயர் ரீட்ரெட்டிங்கிற்கான எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், சீனா போன்ற வெளிநாடு-களின் தரமற்ற புதிய டயர்கள் (யூஸ் அண்டு துரோ) வரவால், டயர் ரீட்ரெட்டிங் தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்-ளது. இதனால், பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இத்தொழிலை நம்பி மாநிலம் முழுதும் நேரடியாகவும், மறைமு-கமாகவும், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்-றன. இந்த தொழில் நசிவு காரணமாக, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது, மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி., பிரச்னை இவற்றுக்கிடையே மூலப் பொருட்கள், ரப்பர் விலையும் வரலாறு காணாத அளவுக்கு, 17 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.ஏற்கனவே, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, தொழில் நடத்தி வரும் நிலையில், இந்த திடீர் ரப்பர் விலை ஏற்றத்தினால், டயர் ரீட்ரெட்டிங் விலை ஒரு செட் டயருக்கு, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, இந்த விலை ஏற்றத்திற்கு, வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.