/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரத்தில் விவேகானந்தர் பண்பாட்டு படிப்பகம் திறப்புராசிபுரத்தில் விவேகானந்தர் பண்பாட்டு படிப்பகம் திறப்பு
ராசிபுரத்தில் விவேகானந்தர் பண்பாட்டு படிப்பகம் திறப்பு
ராசிபுரத்தில் விவேகானந்தர் பண்பாட்டு படிப்பகம் திறப்பு
ராசிபுரத்தில் விவேகானந்தர் பண்பாட்டு படிப்பகம் திறப்பு
ADDED : ஜூன் 22, 2024 12:27 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார் கேட் காசி விநாயகர் கோவிலில், விவேகானந்தர் படிப்பகம் திறக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஆண்டகலுார் கேட் காசி விநாயகர் கோவில் வளாகத்தில் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா, விவேகானந்தர் படம் மற்றும் விவேகானந்தர் பண்பாட்டு படிப்பகம் திறப்பு விழா நடந்தது.முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் வரவேற்றார். கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலாயா முன்னாள் மாணவர்கள் சங்க இணை செயலாளர் தில்லை சிவக்குமார் விழாவை ஒருங்கிணைத்தார். துணைத்தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன் கலந்து கொண்டார். யோகாசனம், உடற் பயிற்சிகளை மாணவ, மாணவியர் செய்து காட்டினர்.