Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவேகானந்தா மகளிர் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

விவேகானந்தா மகளிர் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

விவேகானந்தா மகளிர் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

விவேகானந்தா மகளிர் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

ADDED : ஜூலை 04, 2025 01:19 AM


Google News
திருச்செங்கோடு. திருச்செங்கோடு, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டு மாணவியருக்கான, 28வது கல்வியாண்டு துவக்க விழா, கல்வி நிறுவனங்களின் சேர்மன் கருணாநிதி தலைமையில் நடந்தது.

அட்மிஷன் இயக்குனர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். வேலைவாய்ப்பு இயக்குனர் தரணி, ஆராய்ச்சித்துறை இயக்குனர் பாலகுருநாதன், தலைமை நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திறன் மேம்பாட்டு இயக்குனர் குமரவேல், மாணவியரின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்த, கல்லுாரியில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து எடுத்துரைத்தார்.

கல்வி நிறுவனங்களின் சேர்மன் கருணாநிதி தலைமை வகித்து பேசுகையில்,'' மாணவியர் கல்லுாரி நாட்களை நல்ல விதமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். படிப்பு சம்பந்தமாக மட்டுமே மொபைல்போனை பயன்படுத்த வேண்டும். மாணவியர் தங்களது புகைப்படங்களை சமூகவலை தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்க்க வேண்டும். சாதிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும் வயதில் இருந்தே, நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழக வேண்டும்,'' என்றார்.

முதல்வர் பேபிஷகிலா, தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் தீனதயாளன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us