/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக கொ.ம.தே.க.,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக கொ.ம.தே.க.,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக கொ.ம.தே.க.,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக கொ.ம.தே.க.,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக கொ.ம.தே.க.,
ADDED : ஜூன் 18, 2024 12:15 PM
நாமக்கல்: கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: வரும் ஜூலை, 10ல் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு கொ.ம.தே.க., ஆதரவளித்துள்ளது. அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, கொ.ம.தே.க., பணியாற்றும்.
இதற்காக நாமக்கல், எம்.பி., மாதேஸ்வரன் தலைமையில் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பணிக்குழு உறுப்பினர்களாக மாநில இளைஞரணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வேலு, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் லோகநாதன், சென்னை மாவட்ட செயலாளர் இசை பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும் உள்ள, கொ.ம.தே.க., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விக்கிரவாண்டியில், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவர்.