/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு வேலைக்கு காத்திருக்காமல் சுயதொழில் தொடங்க யோசனை அரசு வேலைக்கு காத்திருக்காமல் சுயதொழில் தொடங்க யோசனை
அரசு வேலைக்கு காத்திருக்காமல் சுயதொழில் தொடங்க யோசனை
அரசு வேலைக்கு காத்திருக்காமல் சுயதொழில் தொடங்க யோசனை
அரசு வேலைக்கு காத்திருக்காமல் சுயதொழில் தொடங்க யோசனை
ADDED : மே 21, 2025 01:47 AM
நாமக்கல், ''உயர்கல்வி பயின்ற பின், அரசு வேலைக்கு காத்திருக்காமல், அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி, தொழில் முனைவோராக முயற்சிக்க வேண்டும்,'' என, கலெக்டர் உமா
தெரிவித்தார்.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்களுக்கான, 'கல்லுாரி கனவு--2025' நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் உமா, தலைமை வகித்து பேசியதாவது: மாணவர்களாகிய நீங்கள், எதிர்கால வாழ்க்கை திட்டத்தை இரண்டாக பிரிக்கலாம். அதில், நினைத்ததை படிப்பது ஒன்று, மற்றொன்று கிடைத்ததை படிப்பது. டாக்டராக வேண்டும் எனநினைத்து, 'நீட்' தேர்வு எழுதி தோல்வியடைந்தால் மனம் தளரக்கூடாது. மருத்துவம் சார்ந்த படிப்புகளான பாராமெடிக்கல், நர்சிங், பிசியோதெரபி படிக்க முன்வர வேண்டும்.
பொதுத்தேர்வில் தோல்வியடைந்தால், மனம் தளராமல் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பாடப்பிரிவுகளை படித்து வாழ்வில் வெற்றி பெறலாம். உயர்கல்வி பயின்ற பின், அரசு வேலைக்கு காத்திருக்காமல் அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி தொழில் முனைவோராக முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, உதவி இயக்குனர் பார்த்தீபன், சமூக நல அலுவலர் காயத்திரி, முன்னோடி வங்கி மேலாளர் முருகன் உட்பட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.