ADDED : ஜூன் 22, 2024 12:27 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், ஜே.கே.கே., நடராஜா நகர், நவசக்தி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி, 42.
வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணியளவில் மின் கசிவு காரணமாக, பிரிட்ஜில் தீப்பிடித்தது. அந்த தீ சமையலறை முழுதும் பற்றி எரிந்தது. இதில், பிரிட்ஜ், மிக்ஸி, பேன், பாத்திரங்கள், அரிசி மூட்டை உள்ளிட்டவை எரிந்து சேதமாகின. அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைத்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.