/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி துவக்கம்நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி துவக்கம்
நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி துவக்கம்
நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி துவக்கம்
நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி துவக்கம்
ADDED : ஜூன் 20, 2025 01:13 AM
நாமக்கல்,நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில், நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடங்களில், அரசு டவுன் பஸ் வசதி துவக்க விழா நடைபெற்றது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடங்களில், இரண்டு அரசு டவுன் பஸ் வசதியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாமக்கல் -வள்ளிபுரம் செல்லும் தடம் எண்: எம் 1 அரசு டவுன் பஸ்சை ஆண்டிப்பட்டி புதுார், புள்ளாக்குமரன்பாளையம், ஆண்டிப்பட்டி பிரிவு, கீரம்பூர் வழியாக, கீரம்பூர் பிரிவு வரையிலும், நாமக்கலில் இருந்து கருப்பட்டிப்பாளையம், பெரியூர் வழியாக தும்மங்குறிச்சி வரையிலும், நாமக்கல்--மோகனுார் செல்லும் தடம் எண்: 12பி டவுன் பஸ்சை பெரமாண்டம்பாளையம் வழியாகவும் நீட்டிக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படும்.நிகழ்ச்சியில், துணை மேயர் பூபதி, அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.