/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முறையான ஊதியம் கேட்டு ஜி.ஹெச்.,துாய்மை பணியாளர்கள் போராட்டம் முறையான ஊதியம் கேட்டு ஜி.ஹெச்.,துாய்மை பணியாளர்கள் போராட்டம்
முறையான ஊதியம் கேட்டு ஜி.ஹெச்.,துாய்மை பணியாளர்கள் போராட்டம்
முறையான ஊதியம் கேட்டு ஜி.ஹெச்.,துாய்மை பணியாளர்கள் போராட்டம்
முறையான ஊதியம் கேட்டு ஜி.ஹெச்.,துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : செப் 02, 2025 01:15 AM
நாமக்கல்;முறையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, 'கிறிஸ்டல்' நிறுவனம் மூலம், துாய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் என, 250 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி அறை முன், நேற்று காலை, 7:00 மணிக்கு, 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், திடீரென தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையான ஊதியம் வழங்க வேண்டும்; வருகை பதிவை காட்ட வேண்டும்; புதிதாக பணி அமர்த்தப்பட்ட துாய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.