Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் இன்று இலவச பரிசோதனை

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் இன்று இலவச பரிசோதனை

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் இன்று இலவச பரிசோதனை

கோவை ஜெம் மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் இன்று இலவச பரிசோதனை

ADDED : செப் 21, 2025 12:54 AM


Google News
ராசிபுரம், கோவை ஜெம் மருத்துவமனை, ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மலக்குடல், பெருங்குடல், பித்தப்பை சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள், மஞ்சள் காமாலை, குடலிறக்கம், ஆசனவாய், கர்ப்பப்பை கோளாறு, ஓவரிக்கட்டிகள் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், மெகா இலவச மருத்துவ பரிசோதனை முகாம், இன்று காலை ௯:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ராசிபுரம், சிவானந்தா சாலையில் உள்ள வித்யாநிகேதன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

ஆதிதிராவிடர், நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். ஜெம் மருத்துவமனை, முதன்மை குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜபாண்டியன் முன்னிலையில் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. எண்டோஸ்கோப்பி, ஸ்கேன் பரிசோதனை தேவைப்படுவோருக்கு முகாம் நடைபெறும் இடத்தில் செய்யப்படும்.

பரிசோதனை தேவைப்படுவோர் காலை உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் வர வேண்டும். பரிசோதனை முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசம், அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, 50 சதவீத சிறப்பு சலுகை வழங்கப்படும். முன்பதிவு விபரங்களுக்கு 7358910515, 90039 32323 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us