/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 23, 2025 01:37 AM
நாமக்கல் : கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகம் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் கொத்தனார், தச்சுவேலை, வர்ணம் பூசுதல், கம்பி வளைப்பு வேலை, பிளம்பர், மின் பணியாளர், வெல்டர், கருமான் கொல்லர், 'ஏசி' மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், கிரானைட் ஒட்டுதல் ஆகிய தொழில்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு, ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ., பயிற்சி நிலையங்களில் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு ஐ.டி.ஐ., மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் துர்கா மூர்த்தி கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பதிவு பெற்ற, 1,800 கட்டுமான தொழிலாளர்களுக்கான ஒரு வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சி வாரந்தோறும் திங்கள் முதல் ஞாயிற்று
கிழமை வரை நடைபெறும்.
பயிற்சியில் கலந்துகொள்ளும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, 800 ரூபாய் உதவித்தொகை, மதிய உணவு மற்றும் பயிற்சியில் கலந்துகொண்டதற்கான பயிற்சி சான்றிதழும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி கமிஷனர் இந்தியா, நாமக்கல் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் ஈஸ்வரன், பயிற்சியாளர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.