ADDED : மார் 17, 2025 04:08 AM
மோகனுார்: கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், மோகனுாரில் நேற்று நடந்தது. ஒன்-றிய தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். பொது செயலாளர்கள் பழனிசாமி, அதீஸ் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன், முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், சுவாமி விவேகானந்தர் மருத்துவ கல்லுாரியை சேர்ந்த டாக்டர்கள் அடங்கிய குழுவினர், கண், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கினர். முகாமில், 250க்கும் மேற்பட்டோர் பயன்பெற்-றனர். பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.