ADDED : செப் 01, 2025 01:32 AM
குமாரபாளையம்:குமாரபாளையம் சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர்கள் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமில், 112 பேர் பங்கேற்றனர். இதில், 14 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்துகொள்ள, ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 11 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
முகாமில், பங்கு பெற்றவர்களுக்கு கண்ணில் புரை, மாறுகண், நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, துாரப்பார்வை இலவசமாக பார்க்கப்பட்டது,