/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இலவச கண் சிகிச்சை முகாம்:சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு இலவச கண் சிகிச்சை முகாம்:சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு
இலவச கண் சிகிச்சை முகாம்:சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு
இலவச கண் சிகிச்சை முகாம்:சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு
இலவச கண் சிகிச்சை முகாம்:சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு
ADDED : செப் 15, 2025 01:35 AM
மோகனுார்:மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், மோகனுார் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. சங்க தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். செயலாளர் கோபிநாத் வரவேற்றார். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேஷன் பொதுச்செயலாளர் முருகேசன், முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், கிட்ட பார்வை, துாரப்பார்வை, பார்வை கோளாறுகள், லென்ஸ் பொருத்துதல் உட்பட கண் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். அதில், 30 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.