Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாளை இலவச கணினி கணக்குப்பதிவியல் பயிற்சி

நாளை இலவச கணினி கணக்குப்பதிவியல் பயிற்சி

நாளை இலவச கணினி கணக்குப்பதிவியல் பயிற்சி

நாளை இலவச கணினி கணக்குப்பதிவியல் பயிற்சி

ADDED : மே 13, 2025 02:13 AM


Google News
நாமக்கல் :ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், நாளை இலவச கணினி கணக்குப்பதிவியல் பயிற்சி துவங்குகிறது.இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் கணினி கணக்குப்பதிவியல் குறித்த, 30 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.

இப்பயிற்சியில் கிராமப்புற இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பயிற்சியின்போது, காலை தேநீர், மதியம் உணவு, மாலை தேநீர், பயிற்சிக்கு உண்டான அனைத்து பொருட்கள், அரசாங்க சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும்.பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் விரைவில் உங்களுடைய விண்ணப்பத்தை நேரில் வந்து பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு, 9698996424, 8825908170, 8489279126 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளாம் என, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us