/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இ.பி.எஸ்., எழுச்சி சுற்றுப்பயணம் முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு இ.பி.எஸ்., எழுச்சி சுற்றுப்பயணம் முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
இ.பி.எஸ்., எழுச்சி சுற்றுப்பயணம் முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
இ.பி.எஸ்., எழுச்சி சுற்றுப்பயணம் முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
இ.பி.எஸ்., எழுச்சி சுற்றுப்பயணம் முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : செப் 19, 2025 01:39 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் தொகுதியில் நடக்கும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணத்திற்கு, பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 2016-21ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், சேந்தமங்கலம் தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை, முன்னால் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல்படி, சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் முயற்சியால் இந்த தொகுதிக்கு, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாமக்கல் முதல் ராசிபுரம் வரை புறவழிச்சாலை; சேந்தமங்கலத்தில் புதிய நீதிமன்ற வளாகம்; வெட்டுக்காட்டில் புதிதாக அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லுாரி; சேந்தமங்கலத்தில் புதிய தாசில்தார் அலுவலகம்; செங்கரையில் புதிய போலீஸ் ஸ்டேஷன்; கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகில், 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மின் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்
பட்டன.
இத்தனை நலத்திட்டங்கள் வழங்கி, சேந்தமங்கலம் தொகுதியை மேம்படுத்திய முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., இன்று நம் தொகுதியில் நடக்கும், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணம் மேற்கொள்கிறார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.