/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில் கொடியேற்றம்
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
மோகனுார்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் தேர்த்-திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.மோகனுார் காவிரி ஆற்றின் வடகரையில், பிரசித்தி பெற்ற கல்-யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு, பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி அருள்பாலிக்-கிறார். இந்தாண்டு தேர்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும், 12 வரை தினமும் காலை, பல்லக்கு புறப்-பாடு, ஸ்நபன திருமஞ்சனம், மாலை ஹனுமந்த, பெரிய திருவடி கருடசேவை, சேஷ, யானை, இந்திர விமானம், குதிரை வாக-னத்தில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்-கிறார்.வரும், 12 அதிகாலை, 5:15 மணிக்கு சுவாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி, 9:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 13ம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு திருக்கொடி இறக்-குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலை-யத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.